கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மேட்டுப்பட்டி பகுதியில் வசிப்பவர் ஓமாந்து. இவரது மனைவி சின்னப்பொண்ணு (70).
இவர், ஞாயிற்றுக்கிழமை குளித்தலை அருகே உள்ள திம்மாச்சிபுரம் பகுதியில், எர்ணாகுளத்திலிருந்து காரைக்கால் செல்லக்கூடிய அதிவிரைவு ரயில் செல்லும் அந்த வழித்தடத்தைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த ரயில் மோதி தூக்கி வீசப்பட்ட அவர், உடல் சிதைந்து உயிரிழந்தார்.
ரயில் வழித்தடத்தைக் கடக்க முயன்ற 70வயது மூதாட்டி உயிரிழப்பு மூதாட்டியின் உடலைக் கண்ட அப்பகுதியினர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் அங்கு வந்த ரயில்வே காவலர்கள் உடலை மீட்டு குளித்தலையில் உள்ள அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தினர். ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்க:'உலகத்தரமான சாலைகள் அமைத்து விபத்துகளைக் குறைத்த அதிமுக அரசு...!'