தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் நேரமிது – அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் - ADMK election campaign

கரூர்: அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கரூர் மாவட்டம் அதிமுக-வின் கோட்டை என்பதை நிருபிக்கும் நேரமிது என்று அரவக்குறிச்சி கிழக்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் கோ. கலையரசன் சூளுரை.

karur-ADMK-election-campaign

By

Published : Oct 10, 2019, 7:54 AM IST

Updated : Oct 10, 2019, 6:59 PM IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, அரவக்குறிச்சி அ.தி.மு.க கிழக்கு ஒன்றியத்தின் சார்பில், கொடையூர், நாகம்பள்ளி ஆகிய ஊராட்சிகளின் உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.

கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டமும், உள்ளாட்சித் தேர்தலுக்கான விருப்பமனு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பேசிய அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றியச் செயலாளர் கோ. கலையரசன், இந்தப் பகுதியில் உள்ள அனைத்து கிளைகளிலும் வீடுவீடாகச் சென்று மக்களின் குறைகளை சேகரித்த, நமது கரூர் மாவட்ட செயலாளரும், தமிழக போக்குவரத்து துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவ்வப்போது பல்வேறு நல்லதிட்டங்களை செய்திருக்கிறார்.

அரவக்குறிச்சி கிழக்கு அதிமுக ஒன்றிய செயலாளர் கோ.கலையரசன் சூளுரை

நமது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளனர். கரூர் மாவட்டம் நமது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவர்களின் கோட்டை என்பதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நிரூபிக்க வேண்டும் என்றார்.

இதையும் படிக்க: இனி சட்டப்பேரவைக்குள் கேமராக்களுக்கு அனுமதி கிடையாது: சபாநாயகர் அறிவிப்பு!

Last Updated : Oct 10, 2019, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details