முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை பாஜகவில் இணைந்தார்! - Singham of Karnataka Police
Annamalai Kuppusamy, a former IPS officer will join BJP on Tuesday at party headquarters in Delhi. General Secretary P Muralidhar Rao and Tamil Nadu BJP State President L Murugan will be present at the event.

17:42 August 25
13:39 August 25
கர்நாடக காவல் துறையில் பணிபுரிந்த முன்னாள் ஐபிஎஸ் அலுவலர் அண்ணாமலை, இன்று (ஆகஸ்ட் 25) பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
முன்னாள் ஐபிஸ் அலுவலர் அண்ணாமலை குப்புசாமி , டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்குச் சென்று, அக்கட்சியில் இணைந்தார். அப்போது பாஜகவின் தேசிய செயலர் முரளிதர ராவ் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர், அண்ணாமலை. இவர் கடந்தாண்டு தனது ஐபிஎஸ் பொறுப்பில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்ட பின், பாஜகவின் சித்தாந்தங்களைப் பிரதிபலிக்கும் 'நாங்கள் தலைவர்கள்' (We the Leaders) என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கி மக்களிடம் மாற்றம் குறித்து பேசி வருகிறார்.
முன்னதாக இவர் விருப்ப ஓய்வு பெறும்போது பெங்களூரு மாநகரின் காவல் துறை துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.