இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடெங்கிலும் தண்ணீர் பிரச்னை தலைவிரித்தாடுகிறது. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துவருகின்றன. சிறு குறு நடுத்தரத் தொழில்கள் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, வேலைவாய்ப்பின்மை 6.01 விழுக்காடு அதிகரித்துள்ளது. இந்திய எல்லையில் சீன அரசு ஆக்கிரமிப்பை அதிகரித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் இந்தியாவையும் இந்திய ஜனநாயகத்தையும் காப்பாற்ற வேண்டிய மிக முக்கியமான பொறுப்பில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்ப்பது ஒன்றே முக்கியமான வேலையாக செய்து வருவது வெட்கப்பட கூடியது மிகவும் கண்டனத்துக்குரியது.
கர்நாடக எம்எல்ஏ 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார்: ஜோதிமணி! - ஜோதிமணி
கரூர்: கர்நாடகாவில் எம்எல்ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார், அவரை தனியாக விமானம் மூலம் அழைத்து செல்கின்றனர் என்று கரூர் எம்.பி ஜோதிமணி கூறியுள்ளார்.
Karnataka
கர்நாடகாவில் எம்எல்ஏ ஒருவர் 100 கோடிக்கு விலை பேசப்படுகிறார். தனியாக விமானத்தில் அழைத்துச் செல்லப்படுகிறார். இதற்கான பணம் வெள்ளை பணமா அல்லது டிஜிட்டல் இந்தியாவில் வந்த கருப்புப் பணமா என்பதை மத்தியில் ஆளும் மோடி அரசு மக்களுக்கு விளக்க வேண்டும். ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பில் தற்போது காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அந்தக் கடமையை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக நிச்சயம் செய்யும்” என்றார்.