கரூர்:கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் (RSYF) மாநிலப் பொருளாளரும் சேலம் சட்டக்கல்லூரி மாணவருமான கரூரைச் சேர்ந்த சுரேந்திரன் (25), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ( DYFI) கரூர் மாநகரச்செயலாளர் சிவா(25), இந்திய மாணவர் பெருமன்ற மாவட்ட நிர்வாகி ( SFI) தமிழரசன்( 23), சங்கர்(21) ஆகிய 4 மாணவர் சங்க நிர்வாகிகளை இன்று பசுபதிபாளையம் காவல் நிலையப் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நான்கு பேர் மீதும் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், கூட்டு சதி, கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சுரேந்திரன் உள்ளிட்ட நான்கு நபர்களும் தற்போது கரூர் ஜெ.எம் -1 நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.