கரூர் மாவட்டம் புகளூரில் 67ஆவது மாநில அளவிலான கபடி போட்டி ஜனவரி 17, 18, 19, ஆகிய மூன்று நாட்கள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி மாவட்ட அமெச்சூர் கபடி குழு தலைவர் அன்புநாதன், செயலாளர் சேதுராமன் ஆகியோர் அதற்கான லோகோவை (logo) அறிமுகம் செய்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சேதுராமன், "கரூர் அமெச்சூர் கபடி கழகம், தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகம் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள 32 மாவட்டங்களிலிருந்து தலைசிறந்த சிறப்பான கபடி வீரர்கள் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்பவர் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார். இதேபோன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் தலைசிறந்த வீரர்கள் கலந்து கொள்வார்கள்.
டிஎன்பிஎஸ்சி செயலர் தேர்வு மையங்களில் ஆய்வு
குறிப்பாக இந்தப் போட்டி நடத்தப்படுவதற்கான முக்கிய நோக்கமே, மாநில அளவிலான கபடி பிரிவில் விளையாடுவதற்காக இந்த தேர்வு போட்டி நடைபெறுகிறது. தேர்வுப் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பரிசு தொகையும் வழங்கப்படுகிறது. முதல் பரிசாக ஒரு லட்சம் மற்றும் தங்கக் கோப்பை, இரண்டாவது பரிசாக 50,000 மற்றும் தங்கக் கோப்பை, மூன்றாவது பரிசாக இரண்டு பேருக்கு தலா 25 ஆயிரம் வழங்கப்படுகிறது.
கபடி போட்டி குறித்து தெரிவிக்கும் சேதுராமன் சுமார் 10,000 கபடி ரசிகர்கள் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளத. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் 12 வீரர்கள் தமிழ்நாடு அணிக்காக தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்கள் தமிழ்நாடு அளவிலான மற்றும் தேசிய அளவிலான கபடி போட்டியில் பங்கேற்று விளையாடுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.