தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் கரோனாவால் உயிரிழந்த முதல் பத்திரிகையாளர்: நேற்று மட்டும் 13 மரணம்!

கரூர்: கரூரில் பத்திரிகையாளர் உள்ளிட்ட 13 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Journalist died in karur
Journalist died in karur

By

Published : Jun 2, 2021, 6:23 AM IST

கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் கரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. ஜூன் 1ஆம் தேதி கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூத்தப் பத்திரிகையாளர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.

கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக முழு ஊரடங்கிலும் முன்களப் பணியாளர்களாகப் பணியாற்றிவரும் மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், செய்தியாளர் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையின்போது உயிரிழந்துவருகின்றனர்.

கடந்த வாரம் நமது அம்மா நாளிதழின் கரூர் மாவட்டச் செய்தியாளர் கண்ணன் (77) கரோனா தொற்று ஏற்பட்டு கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

இந்நிலையில் நேற்று (ஜூன் 1) அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால் கரூர் மாவட்டத்தில் மொத்த இறப்பு எண்ணிக்கை 222 ஆக உயர்ந்துள்ளது.

கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்த முதல் பத்திரிகையாளர் கண்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே உயிரிழந்த பத்திரிகையாளருக்கு கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் கரூர் மாவட்ட பத்திரிகையாளர் பாதுகாப்பு நல சங்கம் சார்பில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details