மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் நிர்வாகக் குழு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜகவின் அகில பாரதிய வித்யா பரிஷத் தேசிய தலைவர் சுப்பையா சண்முகம்நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், கரூர் எம்.பி. ஜோதிமணி, "சென்னையில் பெண்களிடம் ஆபாசமாக நடந்துகொண்ட சுப்பையா சண்முகத்திற்கு இதுபோன்ற பதவி வழங்கப்பட்டது பெண்களுக்கு எந்தவித பாதுகாப்பை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இதேபோன்று பாலக்காடு எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகக் குழுவிலும் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது கூடுதலாகக் கண்டிக்கத்தக்கது.