தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'மக்கள் வரிப்பணத்தில் ஏழைத்தாயின் மகனுக்கு 8ஆயிரம் கோடி ரூபாய் சொகுசு தனிவிமானம்': பிரதமரை சாடிய ஜோதிமணி!

சென்னை: மக்கள் வரிப்பணத்தில் ஏழைத்தாயின் மகனுக்கு 8ஆயிரம் கோடி ரூபாய் சொகுசு தனிவிமானம் என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி பிரதமரை சாடியுள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ட்வீட்
காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ட்வீட்

By

Published : Oct 8, 2020, 8:05 AM IST

அமெரிக்க அதிபருக்கான அதி நவீன தனி விமானம் போலவே, பிரதமர் நரேந்திர மோடிக்கும் அதி நவீன தனி விமானம் ஒன்று புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள போயிங் விமான நிறுவனத்திடமிருந்து ரூ. 8,400 கோடி செலவில் 2 அதி நவீன தனி விமானங்களுக்கு இந்தியா சார்பில் 'ஆர்டர்' செய்யப்பட்டிருந்தன. அதில் ஒரு விமானம் கடந்த வாரத்தில் டெல்லி வந்தடைந்தது. இந்த விமானத்தை பிரதமர் மோடி, மற்றும் குடியரசுத்தலைவர், துணை குடியரசுத்தலைவர் ஆகியோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்நிலையில் இது குறித்து காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி விமர்சித்து ட்வீட் செய்துள்ளார். அதில், 'இந்திய வரலாற்றிலேயே எந்த ஒரு பிரதமரும் தனக்கென தனி விமானத்தை வாங்கியதில்லை. ஏர் இந்தியா விமானத்தையே பயன்படுத்துவது வழக்கம். ஆனால், ஏழைத்தாயின் மகன் ரூ.8 ஆயிரம் கோடி ரூபாய் பொதுமக்கள் வரிப்பணத்தில் சொகுசு தனிவிமானம் வாங்கியிருக்கிறார்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி ட்வீட்

பிரதமருக்காக வாங்கப்பட்டுள்ள இந்த சொகுசு தனிவிமானம் அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் 'ஏர்போர்ஸ் -1' ரகத்தைச் சேர்ந்தது. இந்த விமானத்தில் ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 10 ஆயிரம் கி.மீ. வரை பறக்கலாம். 17 மணி நேரத்திற்கு இடை நில்லாமல் செல்ல முடியும். அதாவது டெல்லியில் கிளம்பி அமெரிக்காவின் நியூயார்க் வரை இடைநிற்காமல் செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...சசிகலா, இளவரசன், சுதாகரன் சொத்துகள் முடக்கம்!

ABOUT THE AUTHOR

...view details