தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

PM Modi coming to TN Next Month: 'எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசினை ஏற்க வைப்போம்' ஜோதிமணி சூளுரை!

PM Modi coming to TN Next Month: புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி, மருத்துவப் படிப்பிற்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இனி நீட் தேர்வு திணிக்கப்படாது எனத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து ஒன்றிய அரசு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளிக்க மறுத்து வருகிறது. எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஏற்க வைப்போம் என்று கரூர் ஜோதிமணி எம்.பி., தெரிவித்துள்ளார்.

எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஏற்க வைப்போம்' ஜோதிமணி சூளுரை...
எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஏற்க வைப்போம்' ஜோதிமணி சூளுரை...

By

Published : Dec 29, 2021, 9:13 PM IST

கரூர்:PM Modi coming to TN Next Month:மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்படும் ஜல் ஜீவன் மிஷன் திட்டங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்குச் செயல்படுத்தப்படும் திட்டங்கள், சுகாதாரம் மற்றும் மருத்துவம் சார்ந்த பணிகளில் மத்திய அரசுத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது. அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஜோதிமணி எம்.பி., ஆலோசனைகளை வழங்கினார்.

கரூர் மாவட்ட வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

இக்கூட்டத்தில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இயக்குநர் மந்திரச்சலம், மகளிர் திட்ட இயக்குநர் வாணிஸ்வரி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திட்ட ஆலோசனைக்கூட்டம்

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி எம்.பி., "கரூர் வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஒன்றிய அரசுத் திட்டங்கள் எவ்வாறு கரூர் மக்களவைத் தொகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் சில பணிகள் சிறப்பாகவும், பல பணிகள் அலுவலர்கள் ஒத்துழைப்பின்றியும் தொய்வாக நடைபெற்று வருகிறது. மேலும், அரசு நிர்வாகம் மற்றும் அலுவலர்கள் ஒத்துழைப்போடு கரூர் மாவட்டத்தில் சிறப்பாகத் திட்டங்களைச் செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்கினேன்.

எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஏற்க வைப்போம்' - ஜோதிமணி சூளுரை

தமிழ்நாட்டிற்கு நிலவும் விரோதப் போக்கு

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் அதனைப் பரிசீலனை செய்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பாஜக தமிழ்நாடு விரோதப் போக்கினை கடைப்பிடித்து வருகிறது.

நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக் கோரிக்கை தமிழ்நாட்டில் வலுத்து வருகிறது.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி

மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள் தற்கொலை மேற்கொள்ளும் கொடுமையான சூழ்நிலை தொடர்ந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டிலுள்ள மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமித்த கருத்தோடு நீட் தேர்வுக்குத் தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.

காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும்

தொடர்ந்து ஒன்றிய அரசு நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க மறுத்து வருகிறது. எங்களது கோரிக்கைகளை ஒன்றிய அரசு ஏற்க வேண்டும் அல்லது ஏற்க வைப்போம். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட்டில் தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்று ராகுல்காந்தி கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சி ஒன்றிய அரசின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்போம்.

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி

தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் மோடி புதிய மருத்துவக் கல்லூரிகளைத் திறந்து வைக்க உள்ளார்.

அதே சமயத்தில் மருத்துவப் படிப்பிற்கு நடத்தப்படும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கோரிக்கை வலுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இனி நீட் தேர்வு திணிக்கப்படாது எனத் தெரிவிப்பார் என எதிர்பார்க்கிறோம்" என்று ஜோதிமணி தெரிவித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக ஜோதிமணி எம்.பி., சில நாட்களுக்கு முன்பு போராட்டம் நடத்திய நிலையில், தற்போது ஆய்வுக்குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரும் ஜோதிமணி எம்.பியுடன் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'ஜான்வி முதல் சமந்தா வரை'; டூ பீஸில் கலக்கும் நாயகிகள்!

ABOUT THE AUTHOR

...view details