கரூர்:மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஜோதிமணி போட்டியிட்டு அதிமுகவின் முக்கிய தலைவரான தம்பிதுரையை 4.20 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றவர்.
ஜோதிமணியின் வெற்றிக்கு கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளராக உள்ள மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முக்கிய பங்காற்றினார்.
ஜோதிமணி Vs செந்தில் பாலாஜி அரசியல்
இந்நிலையில் கடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலின் போது திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி அழைக்கப்படவில்லை என ஜோதிமணி தரப்பும், ஜோதிமணி அழைக்கப்பட்டும், தேர்தல் பரப்புரைக்கு உரிய நேரம் வழங்கவில்லை என செந்தில் பாலாஜி தரப்பும் மாறி மாறி குற்றம் சாட்டி கொண்டனர்.
ஜோதிமணி Vs செந்தில் பாலாஜி அரசியல் இதன்பின்னர் நடைபெற்ற அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் ஜோதிமணி புறக்கணிக்கப்பட்டு வந்தார். இதனால் செந்தில் பாலாஜியுடன் இணைந்து பணியாற்றி வந்த ஜோதிமணி, அதன் பின்னர் கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனியாக மக்களின் கோரிக்கைகளை மனுவாக பெற்று பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று (நவ.25) மதியம் 12 மணியளவில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மாற்றுத்திறனாளிகள் முகாமினை நடத்துவதற்குக் கடிதங்கள் அனுப்பியும் பதில் தராமல் கால தாமதப்படுத்தி வருவதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 25 மணி நேர தொடர் போராட்டம் விடிய விடிய போராட்டம் இப்போராட்டம் துவங்கியதும் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் பேச்சுவார்த்தை நடத்தியும், முகாம் நடத்த அனுமதி வழங்கினால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஜோதிமணி தெரிவித்திருந்தார். இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தரை விரிப்பு விரிக்கப்பட்டு இரவு முழுவதும் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கட்சித் தொண்டர்களுடன் உறங்கினார்.
கோரிக்கை மனு அப்பொழுது ஈடிவி பாரத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "கரூர் நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் இரண்டரை ஆண்டுகளில் சுமார் 10,000 மாற்றுத்திறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுள்ளேன். எனவே, மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையிடம் கேட்டுப் பெற்ற இலவச விலையில்லா மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் முகாமை நடத்துவதற்கு அனுமதி கேட்டு கடிதம் வழங்கியும் கடந்த சில நாட்களாக மாவட்ட ஆட்சியர் கால தாமதப்படுத்தி வந்ததால் போராட்டத்தைத் துவங்கி நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
போராட்டம் தனது தொகுதியில் உள்ள ஒரு நபரின் கோரிக்கைக்காகக் கூட போராடுவதற்குத் தொகுதியின் எம்பி என்ற முறையில் கடமைப்பட்டுள்ளேன். 10,000 மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைக்கு தற்பொழுது போராடி வருகிறேன். கரூர் மக்களவைத் தொகுதியில் 15 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக என்னை நினைத்து என்னைத் தேர்ந்தெடுத்தார்கள்.
போராட்டத்தில் நியாம் இருக்கிறது நியாமான போராட்டம்
மேலும், அவர்களுக்காக நான் இப்பொழுது போராடுகிறேன். போராட்டத்தில் நியாம் இருக்கிறது. இது அனைவருக்கும் தெரிந்துள்ளது. முகாம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்ற எளிமையான கோரிக்கையைத் தான் முன் வைத்துள்ளேன்" என்றார்.
ஒரு நபரின் கோரிக்கைக்கு கூட போராடுவேன் இரவு 10 மணிக்கு மேலும் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறீர்கள் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்த முன் வருவார் என்று நம்புகிறீர்களா என்று கேட்டதற்கு, "நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கவில்லை, மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். அனுமதி வழங்கினால் போராட்டத்தை நிறைவு செய்து கொள்வேன்" என்று பதிலளித்தார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜோதிமணி மாவட்ட ஆட்சியர் ஏன் தடுக்கிறார்? கரூர் மாவட்டம் முழுவதும் முகாம் நடைபெற்று வருகிறது, எம்பி விரும்பினால் அதில் பங்கேற்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறி இருக்கிறாரே என்று கேட்டதற்கு, "மாநில அரசு நடத்தும் மாற்றுத் திறனாளிகள் முகாம் போல, ஒன்றிய அரசு வழங்கும் நிதியின் கீழும் திட்டத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். மக்கள் பணம்தானே, மக்களுடைய பணம் மக்களுக்குக் கிடைக்காமல் ஏன் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார். இரண்டு முகாம்களையும் ஒருங்கிணைத்து நடத்தலாம்" என்று ஜோதிமணி எம்பி கூறினார்.
போராட்டத்தை கைவிட்டார் ஜோதிமணி போராட்டத்தை கைவிட்டார் ஜோதிமணி
கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியும் கைவிட மறுத்து, தொடர்ந்து 25 மணி நேரத்திற்கும் மேலாகப் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், ஜோதிமணியுடன் வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டார். போராட்டத்தின் போதும் ஜோதிமணி தனது வழக்கமான அலுவலக பணியை தொடர்ந்து மேற்கொண்டு வந்தார்.
மக்கள் நலனில் அக்கறையுள்ள முதலமைச்சர்
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஜோதிமணி , "கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIP முகாம் நடத்தப்படும் என்று உறுத அளிக்கப்பட்டததை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் நலனில் அக்கறையுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே. என். நேரு, ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்துள்ளார்.
போராட்டம் தொடங்கியது முதல் ஜோதிமணி எம்பிக்கு சமூக வலைத்தளங்களில் #standwithjothimani ஹாஷ்டேக் மூலம் பலரும் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரூரில் பரபரப்பு.. களமிறங்கிய ஜோதிமணி.. மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டம்!