தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தம்பிதுரையை சாடிய காங்கிரஸ் பெண் வேட்பாளர்

கரூர்: "தம்பிதுரையால் கரூர் தொகுதிக்கு எந்த நலத்திட்டத்தையும் கொண்டு வர முடியவில்லை" என்று, கரூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜோதிமணி

By

Published : Mar 25, 2019, 7:00 PM IST


கரூர் பாராளுமன்ற தொகுதி திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி, மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அதிகாரியுமான அன்பழகன் முன்னிலையில் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

மேலும் தேர்தல் அதிகாரி முன்பு தேர்தல்ஆணையத்தின் விதிப்படி சட்டப்படி நேர்மையான தேர்தலை நடைமுறைகளை கடைப்பிடிப்பேன் என்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார். வேட்புமனுத் தாக்கல் நிறைவுக்கு பின்பு செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கூறுகையில்,

"கரூர் தொகுதிக்கு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த தம்பிதுரை மக்களவைத் துணை சபாநாயகர் மற்றும் சட்டத்துறை பொறுப்புகளை எல்லாம் வசித்தவர். ஆனால் இதுவரை கரூர் மாவட்டத்திற்கு அவர் செய்த நலத்திட்டங்கள் என்ன?. இதுவரை அவரது தொலைபேசி எண்ணாவது பொதுமக்கள் அல்லது செய்தியாளர்களிடம் இருக்கிறதா என்றால் இல்லை என்ற பதிலே நமக்கு கிடைக்கும். சாதாரண மக்கள் அவரை ஒருபோதும் தொடர்பு கொண்டு பேச முடியாது. மக்களிடம் இருந்து அவர் அந்நியப்பட்டு இருக்கிறார்.

இந்த தொகுதியில் நிறைய பிரச்சனைகள் இருகிறது. அவற்றை சீரமைக்கும் பொறுப்பினை தம்பிதுரை இதுநாள் வரை தட்டிக் கழித்து வந்துள்ளார். தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அனைத்தையும் சரிசெய்வேன்" என்று உறுதியளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details