கரூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர், கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவருமான முத்துக்குமார் என்கின்ற தானேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, 1072 ஏழை எளிய மக்களுக்கு சேலை, சுடிதார் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார். பின்னர், பொதுமக்களுக்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.