தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் சோதனை! - karur it raid

கரூர்: பிரபல தனியார் தொழிற்சாலையில் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தியுள்ளனர்.

வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

By

Published : Mar 29, 2019, 9:08 AM IST

கரூர் மாவட்டம் செம்படை மற்றும் சின்ன தாராபுரம் செல்லும் சாலை ஆகிய இடங்களில் தனியாருக்கு சொந்தமான கொசுவலை தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது.

இங்கு உற்பத்தி செய்யப்படும் கொசுவலை இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஆண்டுக்கு சுமார் 500 கோடிகளுக்கும் மேல் வர்த்தகம் நடைபெறுகிறது.

இந்நிலையில், இன்று மாலை திருச்சியில் இருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் 2 கார்களில் வந்து 8 வருமான வரித்துறை அதிகாரிகள் தொழிற்சாலை மற்றும் அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டு சமர்பிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான ஆவணங்கள் குறித்தும், வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட கொசுவலை தொடர்பான ஆவணங்களைப் பற்றியும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details