தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெட்ரோல், டீசல் விலையை குறைக்கச் சொல்வது தேவையற்ற வாதம் ! - அமைச்சர் சிவசங்கர் - petrol

மத்திய அரசு மக்கள் மீது ஏற்றி வைத்துள்ள வரி சுமையை குறைக்க வேண்டும் மாறாக மாநில அரசுக்கு பெட்ரோல் , டீசல் மூலம் கிடைக்கும் வருவாயை குறைக்க வேண்டுமென கூறுவது தேவையற்ற வாதம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்
அமைச்சர் சிவசங்கர்

By

Published : May 23, 2022, 6:26 AM IST

கரூர்: திமுக சார்பில் கரூரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய அளவில் தமிழ்நாடு பொருளாதார நிலையில் திராவிட கொள்கையால் எப்படி வளர்ச்சி பெற்றுள்ளது என்பது குறித்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு கொண்டு செல்ல அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாட்டில் பயிலரங்குகள் நடைபெற உள்ளதாக கூறினார்.

அப்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சிலிண்டருக்கு மானியம் வழங்குவோம் என கூறியதை நிறைவேற்ற 72 மணி நேரம் அவகாசம் வழங்கியுள்ளது தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது.

அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர் சந்திப்பு

அதற்கு பதில் அளித்த சிவசங்கர், மத்திய அரசு சிலிண்டருக்கு வழங்க வேண்டிய மானியத்தை முழுமையாக முதலில் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். ் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெட்ரோல், டீசல் , சிலிண்டர் விலை என்ன என்றும், தற்போது அதன் விலை என்பதை பார்க்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் மக்கள் மீது ஏற்றி வைத்துள்ள வரி சுமையை மத்திய அரசு குறைக்க வேண்டும். மாறாக மாநில அரசுக்கு கிடைக்கும் வருவாயை குறைக்க வேண்டுமென மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது தேவையற்ற வாதம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் வரி குறைப்பால் மக்களுக்கு நன்மையே - கே.பாலகிருஷ்ணன்

ABOUT THE AUTHOR

...view details