தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி தொடக்கம்! - எம்ஆர் விஜயபாஸ்கர்

கரூர்: அதிமுக மாவட்ட கழகத்தின் சார்பில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 8 கி.மீ தூரத்திற்கு சீரமைக்கப்படும் பாசன வாய்க்கால் பணியை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பார்வையிட்டார்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர்

By

Published : Aug 31, 2019, 2:11 AM IST

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை அடுத்த புகழூர் பகுதியில், பாப்புலர் முதலியார் வாய்க்கால் காவிரி ஆற்றில் இருந்து பிரிகிறது. இந்த வாய்க்கால், வாங்கல் பகுதி வரை பாய்ந்து கடைமடை வரை செல்லமுடியாத அளவிற்கு தூர் வாராமலும், பக்கவாட்டு கரைகள் உடைந்தும் காணப்பட்டது. இவற்றை சீரமைத்து கடைமடை வரை தண்ணீர் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 6 மாதங்களாக நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட அதிமுக சார்பில் சுமார் ஒரு கோடி மதிப்பீட்டில் பாப்புலர் முதலியார் வாய்க்காலை சீரமைக்கும் பணிகளை தொடக்கி வைத்தார்.

பாசன வாய்க்கால் சீரமைப்பு பணி தொடக்கம்!

வாங்கல் ஊராட்சிக்கு உட்பட்ட கருப்பம்பாளையம் ரொட்டிக்கடை முதல் நெரூர் வடபாகம் வழியாக வேடிச்சிபாளையம் வரை சென்று நெரூர் வாய்க்காலுடன் இணைகிறது. மேலும் சின்னகாளிபாளையத்தில் 2 குளத்தையும், பெரிய காளிபாளையம் கிராமத்தில் 1 குளத்தையும் நிரப்பும் வகையில் இந்த வாய்க்கால் 8 கி.மீ தூரத்திற்கு 3 அடி ஆழம் முதல் 24 அடி ஆழம் வரை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால் 4 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும். 80 சதவிகித பணிகள் முடிவடைந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் பணிகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அலுவலர்களுடன் சென்று பார்வையிட்டதுடன், பாப்புலர் முதலியார் வாய்க்காலில் இருந்து விஸ்தரிப்பு செய்யப்பட்ட வாய்க்காலுக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details