கரூர்: குளித்தலை வருவாய் கோட்டம் தோகமலை ஊராட்சி ஒன்றியம் கழுகூர் வருவாய் கிராமம், கழுகூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான பொதுப்பணித்துறை குளம் உள்ளது. இதில், 377 ஏக்கர் நிலத்தில் உள்ள அரசு மரங்களை ரூ.92 ஆயிரத்திற்கு மட்டும் ஏலம் எடுத்து ரூ.26 லட்சத்திற்கு தனியாக ஏலம் விட்டு அரசுக்கு பல லட்சங்கள் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் சம்மந்தமான ஆடியோ சமூக வலைதளங்களில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மோசடியில் அரசு பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கும், முக்கிய அரசு அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும், பல லட்சங்கள் கைமாறியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது சம்மந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்து புகாரை சிபிசிஐடி விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை அவசர வழக்குப்பதிவு செய்ப்படுவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.