கரூர்மாவட்ட இசை பள்ளியில் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கலையியல் அறிவுரைஞர் ஜாகீர் உசேன் ஆய்வு செய்ய சென்ற போது பரத நாட்டிய ஆசிரியையிடம் தவறாக நடந்து கொண்டதாக தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்குநரிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியை புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக விஷாக கமிட்டி விசாரணை ஏப்.8, ஏப்.22 தேதிகளில் 2 கட்டமாக சென்னையில் நடைபெற்றது. இதனிடையே ஏப்ரல் 28 ஆம் தேதி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியை ஜாகிர் உசேன் மீது புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ரூபி கரூர் மாவட்ட இசைப்பள்ளியில் நேற்று (மே.2) தேதி விசாரணையைத் தொடங்கினர்.
அதனை தொடர்ந்து இன்றும் (மே.3)விசாரணை நடைபெற்று வருகிறது. அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் அடிப்படையில் இசைப்பள்ளியில் ஆசிரியையிடம் தனி அறையில் விசாரணை நடைபெற்றது. மேலும் இசைப் பணியாற்றும் சக ஆசிரியர்களிடம் மாணவர்களிடம் ஜாகிர் உசேன் ஆய்வுக்கு வந்த பொழுது நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.