கரூர் மாவட்டத்தில் குற்ற வழக்குகள் தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் திருச்சி சரக காவல் துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கான ஆலோசனைகள் எடுகத்துரைக்கப்பட்டது. மேலும் இதில் பேசிய அவர்,
குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் காவல் துறையினரிடம் பிடிபடாமல் தப்பித்துச் சென்று விடுவதால் விசாரணைகள் பாதிக்கிறது. இதனால் வழக்குகளும் தேக்கம் அடைகிறது. வழக்குகள் தொடர்பான விவரங்களையும் குற்றவாளிகளின் தகவல்களையும் காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்து வழக்குகளில் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.