தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தைகளை வைத்து அரசியல் வன்மம் புகுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது; அண்ணாமலை

தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகளை வைத்து அரசியல் வன்மத்தை புகுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

By

Published : Jan 18, 2022, 2:19 AM IST

கரூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று(ஜன.17) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு வாகனப் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள 15 மாநிலங்களுக்கு மட்டுமே ஊர்வலத்தில் பங்கேற்க அனுமதி வழங்க முடியும் என்பதால் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்க மாநிலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் எதிர்க்கட்சிகள் வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி, பாரதி ஆகியோரது கருத்துருவை மத்திய அரசு நிராகரித்து விட்டதாக பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்த 2014ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டிற்கு 7 முறை குடியரசு தின ஊர்வலத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் ஆட்சியில், 2009ஆம் ஆண்டில் ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டது.

குறிப்பாக கடந்த 2005ஆம் ஆண்டு முதல் குடியரசு தினவிழா ஊர்வலத்தில் கர்நாடகா 12 முறை, மணிப்பூர் 6 முறை குஜராத் 8 முறை, ஜம்மு-காஷ்மீர் 17 முறை, மகாராஷ்டிரா 10 முறை, தமிழ்நாடு 8 முறை அணிவகுப்பு நடத்தியுள்ளது. இப்படி இருக்கையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விசமத்தனமான கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் முடிவு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பிரதமர் குறித்த தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவதூறு

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி நிகழ்ச்சியில் பிரதமர் குறித்து வன்மமான கருத்துக்களை குழந்தைகள் மூலம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டித்தால் கருத்து சுதந்திரம் என்ற போர்வையில் அந்த தொலைக்காட்சி நிர்வாகம் ஒளிந்து கொள்ள முயற்சிக்கிறது. 2011ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு கொண்டு வந்த குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு ரியாலிட்டி நிகழ்ச்சிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

அதற்கு முற்றிலும் மாறாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. குழந்தைகளை வைத்து அரசியல் வன்மத்தை புகுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிகழ்ச்சியை நடத்திய இயக்குநர் குறிப்பிட்ட அரசியல் கட்சியை சார்ந்தவர் என்பதை அவரது போஸ்புக் பக்கத்தில் சென்று பார்த்தபோது தெரிந்து கொண்டோம்.

இதுகுறித்து புகார் அளித்துள்ளோம். அந்த தொலைக்காட்சி நிர்வாகம் பகிரங்கமாக பொதுவெளியில் மன்னிப்பு கோரவேண்டும். ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்பார்கள்" என்றார்.

இதையும் படிங்க:நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழ அண்ணாமலை தலைமையில் யாகம்

ABOUT THE AUTHOR

...view details