கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில், நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். காலை, மாலை என இரு வேளைகளிலும் வகுப்புகள் நடைபெறும் இக்கல்லூரியில், நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது.
கல்லூரி மாணவிகள், கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்து படிக்கும்போது நாய்களின் தொல்லை அதிகமாகவுள்ளதாக கூறுகின்றனர்.
கலைக் கல்லூரியில் அதிகரிக்கும் நாய்களின் தொல்லை மேலும், சில நேரங்களில் வளாகத்திற்குள் நாய்கள் சண்டையிட்டு கொண்டிருக்கும்போது அந்தப் பக்கம் செல்வதற்கே அச்சமாக இருக்கும் என்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு, கரூர் நகராட்சி நிர்வாகம் நாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க:தனியார் கல்லூரியில் பெண்கள் தற்காப்பு குறித்து விழிப்புணர்வு