கரூர் மாவட்டம், காந்தி கிராமம் பகுதியில் ரூ.269.69 கோடி மதிப்பீட்டில் சுமார் 27.49 ஏக்கர் பரப்பளவில் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இயல் கூடம், நிர்வாக கட்டடம், மாணவ மாணவியர் தங்கும் விடுதி, முதல்வர் குடியிருப்பு, மருத்துவ ஆசிரியர்கள் குடியிருப்பு, செவிலியர் விடுதி, உறைவிட மருத்துவ அலுவலர், உதவி உறைவிட மருத்துவ அலுவலர், மருத்துவ கண்காணிப்பாளர் மற்றும் செவிலியர் கண்காணிப்பாளர் குடியிருப்புகளும் உள்ளன. இதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். இதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி - முதலமைச்சர் திறந்து வைத்தார்
கரூர்: காந்தி கிராமம் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
பின்னர் இது குறித்து அவர் கூறுகையில், ”இந்த கல்லூரியில் நாளை முதல் வகுப்புகள் தொடங்கும். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கரூர் மக்களின் நலனை கருத்தில்கொண்டு அமைத்துக் கொடுத்த, இந்த மருத்துவக் கல்லூரியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது திறந்து வைத்துள்ளார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ளது போல் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் நவீன எம்ஆர்ஐ ஸ்கேன் இந்த மருத்துவமனையில் பொருத்தியமைக்கும் நன்றி” என்றார்.