கரூர் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களில் மட்டும் 1,045 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஏப்ரல் மாதம் இறுதியில் கரூர் மாவட்டத்தில் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 986. அதேசமயம், கடந்த 5 நாள்களில் மட்டும் புதிதாக 1,045 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அதாவது, ஏப்ரல் 30ஆம் தேதி 176 பேருக்கும், மே ஒன்றாம் தேதி 175 பேருக்கும், மே இரண்டாம் தேதி 241 பேருக்கும், மே மூன்றாம் தேதி 229 பேருக்கும், மே நான்காம் தேதி 269 பேர் என மொத்தம் நான்கு நாள்களில் மட்டும் புதிதாக 1045 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதில் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தி கடந்த ஐந்து நாள்களில் மட்டும் சுமார் 635 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதில் மே நான்காம் தேதி மட்டும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அவர்களில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும், 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும், சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் என மூன்று பேர் சிகிச்சை பலனின்றி கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.