தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூர் கல்குவாரி விவகாரம்; கல்குவாரியில் 2வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்தம்! - கல்குவாரி உரிமையாளர்கள் சங்கம்

கரூர் மாவட்ட கல்குவாரி கிரசர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலை நிறுத்தம் இரண்டாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கல்குவாரியில் 2வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்தம்
கல்குவாரியில் 2வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்தம்

By

Published : Jul 3, 2023, 3:16 PM IST

கரூர்:மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி, தென்னிலை, சின்னதாராபுரம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள சிவாயம், தோகமலை ஆகிய பகுதிகளில் அரசு அனுமதி பெற்று இயங்கும் கல்குவாரிகளில் விதிமுறை மீறல்கள் கண்டறியப்பட்டு, கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ரூபாய் 44.65 கோடி அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரியில் 2வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்தம்

மேலும் சில கல்குவாரிகளில் ஆய்வு நடைபெற்று வருவதால், இதனை கண்டித்து கரூர் மாவட்டத்தில் இயங்கும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த ஒருவார காலமாக கல் குவாரிகளை இயக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக அரசு மேற்கொண்டு வரும் புதிய கட்டிடப் பணிகள், மேம்பாலப்பணிகள், ரயில்வே பாதைப் பணிகள், தனிநபர் வீடு கட்டுமான பணிகள், தொழிற்சாலை கட்டுமான பெரிதும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

கட்டுமான தொழிலை நம்பி உள்ள கட்டிடத் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள் என பல்வேறு தரப்பினர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்களுக்கு ஆதரவாக கரூர் கோவை சாலை பவித்திரம் பகுதியில் கரூர் மாவட்ட கல்குவாரி கிரசர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் ஜூலை 2 ஆம் தேதி காலை துவங்கிய போராட்டம் இன்றும் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

கரூர் மாவட்ட கல்குவாரி கிரசர் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும் கல்குவாரி உரிமையாளருமான சுப்பிரமணி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், “கல்குவாரி உரிமையாளர்கள் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக கரூர் மாவட்ட கல்குவாரி கிரசர் டிப்பர் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் ஆதரவு தெரிவித்து காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறோம்.

அரசு சமூக ஆர்வலர்கள் அளிக்கும் புகாரில் ஆய்வு செய்து அபராத தொகை கல் குவாரிகளுக்கு விதிக்கும் முன்னர் கல்குவாரி உரிமையாளர்களையும் ஆய்வின் போது, அழைக்க வேண்டும். தன்னிச்சையாக அதிகாரிகள் செயல்பட்டு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக கல்குவாரி தொழில் மிகவும் நசிந்து வருகிறது. சமீப காலமாக அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் டிஜிட்டல் சர்வே மூலம் கல்குவாரி தொழிலை நசுக்கும் நடவடிக்கையை கனிமவளத்துறை மற்றும் சுரங்கத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறையும் கல்குவாரி உரிமம் புதுப்பிக்கும் போது, அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து, அனுமதி நீட்டிப்பு வழங்கி உள்ளனர். ஆனால் தற்பொழுது விதிமுறை மீறல்கள் மீறி உள்ளதாக ஆய்வு செய்வது குறித்து தமிழக அரசு தலையிட்டு கல்குவாரி தொழில் தொடர்ந்து நடைபெற முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க:கரூர் கல்குவாரிகளுக்கு ரூ.44 கோடி அபராதம்.. ‘இது கண்துடைப்புதான்’ - கல்குவாரிகள் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டு

ABOUT THE AUTHOR

...view details