தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு! - கரூர் குற்றச் செய்திகள்

கரூர்: காந்தி கிராமத்தில் பூட்டியிருந்த வீட்டிற்குள் 30 பவுன் நகையுடன் 50 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச்சென்ற நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

in-karur-govt-teachers-house-burgled-by-30-pounds-gold-stolen
அரசுப் பள்ளி ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு!

By

Published : Jan 2, 2020, 11:22 AM IST

கரூர் மாவட்டம் காந்தி கிராமத்தில் விநாயகர் கோயில் ஐந்தாவது தெருவில் வசித்துவருபவர் முத்தையா. அவரது மனைவி சல்சி டோனி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் திருச்சியில் உள்ள கல்லூரியில் படித்துவருகிறார்.

சல்சி டோனி வடுகபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் நடைபெற்று முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தேர்தல் பணிக்கு கரூர் மாவட்டத்திலுள்ள தோகைமலைப் பகுதிக்கு சென்றுள்ளார்.

தேர்தல் பணிக்கு முன்னர் வங்கியிலிருந்து நகையை மீட்டு தனது மூத்த சகோதரர் மகன் திருமணத்திற்காக கொண்டுவந்துள்ளார் சல்சி டோனி. இதனை நோட்டமிட்டுவந்த அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 30 பவுன் நகையுடன் 50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றனர்.

பின்னர் இது குறித்து பசுபதிபாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். அதனைத் தொடர்ந்து வழக்குப்பதியப்பட்டு திருட்டில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.

அரசுப்பள்ளி ஆசிரியர் வீட்டில் 30 பவுன் நகை திருட்டு!

இதையும் படியுங்க: 10 ஆண்டுகளாக வேலைப் பார்த்த கடையில் திருடியவர் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details