கரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவை தொகுதியில், மக்கள் நீத மய்யம் கூட்டணியின் சார்பாக இந்திய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் போட்டியிடுகிறார்.
இவர் குளித்தலை சார் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 19) தேர்தல் நடத்தும் அலுவலர் ஷேக் அப்துல் ரகுமானிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.