தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மண உறவுக்கு வெளியேயான உறவு: பெண்ணின் கணவனை டிராக்டர் ஏற்றி கொன்றவர் கைது! - husband murdered wife

கரூர்: திருமண உறவைத் தாண்டிய காதலால் பெண்ணின் கணவனை டிராக்டர் ஏற்றி கொன்றவரை காவல் துறையினர் கைது செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.

husband-murdered-wife

By

Published : Sep 27, 2019, 3:02 PM IST

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த பரமத்தி அருகே உள்ளது முடிகணம். இந்த ஊரில் மனோகரன் (43), மனைவி சித்ரா (37), ஒன்பது வயது மகனுடன் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் சுதாகர் (20) என்பவரின் வீடு இருக்கிறது.

இந்நிலையில் சுதாகருக்கும் சித்ராவிற்கும் சில ஆண்டுகளாக திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு இருந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவரது கணவர் மனோகர் சுதாகரை கண்டித்துள்ளார்.

மண உறவைத் தாண்டிய காதலால் நேர்ந்த விபரீதம்

இதனால் ஆத்திரமடைந்த சுதாகர் நேற்று மாலை தன்னுடைய டிராக்டர் வாகனத்தை எடுத்துச் சென்று பரமத்தியிலிருந்து முடிகணத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த மனோகர் மீது ஏற்றி தப்பியோடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் அவசர ஊர்தி மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது செல்லும் வழியிலேயே மனோகரன் பரிதாபமாக உயிர் இழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி காவல் துறையினர் மனோகரன் கொலைக்கு காரணமாக இருந்த சுதாகர், சித்ராவை கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

இதையும் படிங்க:

தனியார் நிறுவனத்திற்கு எதிராக சாலை மறியல்!

ABOUT THE AUTHOR

...view details