தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் - விஷ்வ இந்து பரிஷத்

கரூர்: தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து இந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

hindu religious and charitable endowments should relieve from govt temples karur vishwa hindu parishad protests
விஷ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

By

Published : Jan 29, 2020, 7:52 PM IST

கரூர் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய தபால் நிலையம் முன்பு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும், ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, திருப்பதி தேவஸ்தானத்தில் கிறிஸ்தவ புகைப்படங்கள் வைத்திருப்பது, இந்து அல்லாத பிற மதத்தினரை பணியில் அமர்த்துவது போன்றவை குறித்து ஜெகன்மோகன் ரெட்டிக்கு எதிராகவும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலிருந்து இந்து அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் முருகேசன், மாநில இயக்க அமைப்பாளர் பாரத் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விஷ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

இதையும் படியுங்க: சிஏஏ போராட்டக்காரர்களுடன் அமர துணிச்சல் உள்ளதா? - கெஜ்ரிவாலுக்கு அமித் ஷா சவால்

ABOUT THE AUTHOR

...view details