கரூர்: கரூர் மாவட்ட பகுதிகளில் சாலை அமைக்காமலே சாலை அமைத்ததாகவும் ஒப்பந்ததாரருக்கு ரூ.3 கோடிக்கு மேல் பணம் வழங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த ஏப்.8,9 ஆகிய தேதிகளில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்களிடம் புகார் அளித்திருந்தார்.
அப்புகாரில் கரூர் மாவட்டத்தில் என்.புதூர், புகழூர் சர்க்கரை ஆலை சாலை உள்ளிட்ட நான்கு சாலைகள் அமைக்கப்படாமலேயே ஒப்பந்ததாரரான எம்.சி.சங்கர்ஆனந்தன், எம்.சி.சங்கர்ஆனந்த் இன்ப்ரா, கரூர் என்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனம் ஆகியோருக்கு ரூ.3 கோடிக்கு மேல் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் துணையுடன் பணம் வழங்கப்பட்டு ஊழல் நடைபெற்றுள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.