தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அத்துமீறிய அரசுப்பள்ளி ஆசிரியர்கள் - மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என பெற்றோர் கவலை

அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியர், சக பெண் ஆசிரியருடன் தவறான உறவில் இருப்பதாகவும், இதனால் மாணவர்கள் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்பதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி, பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

headmaster
headmaster

By

Published : May 5, 2022, 4:49 PM IST

கரூர்: கரூர் மாவட்டம் அஞ்சூர் கிராமத்தில் செயல்படும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரியும் சி.ரவிக்கும், அதே பள்ளியில் பணிபுரியும் பெண் இடைநிலை ஆசிரியருக்கும் தவறான உறவு இருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் ஒரே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் என்பதை கடந்து, வீட்டிலும் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து, தலைமையாசிரியரின் மனைவி அந்த பெண் ஆசிரியரிடம் கேட்டபோது, அப்படித்தான் இருப்பேன் என அவர் திமிராகவும் மிரட்டும் வகையிலும் பேசியதாக தெரிகிறது. இதுதொடர்பான ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்த ஆடியோ ஆதாரத்துடன், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறைக்கு புகார் அளித்தனர். ஆசிரியர்களின் இதுபோன்ற செயல்களால் மாணவர்களின் ஒழுக்கம் பாதிக்கப்படும் என்றும், இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களிடம் மரியாதைக் குறைவாகவும், ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், ஆசிரியர்களின் இதுபோன்ற தவறான செயல்கள், மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: இளைஞர் மீது ஐஏஎஸ் அலுவலர் லவ் ஜிகாத் புகார்!

ABOUT THE AUTHOR

...view details