தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நரேந்திர மோடியை படுகொலை செய்ய திட்டம் - பகீர் கிளப்பும் ஹெச். ராஜா - Sonia Gandhi's plot to assassinate Prime Minister Modi

பிரதமர் நரேந்திர மோடியை படுகொலை செய்ய சோனியா காந்தி வீட்டில் திட்டமிட்டுவருவதாகக் கூறப்படுகிறது என ஹெச். ராஜா மிகப்பெரும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

h raja controversy speech
ஹெச்.ராஜா

By

Published : Jan 11, 2022, 5:19 PM IST

கரூர்: கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று (ஜனவரி 11) கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் பஞ்சாப் மாநில அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஹெச். ராஜா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வே. ராமசாமி காவிரி ஆற்றங்கரையில் நண்பர்களோடும் விலைமாதர்களோடும் கும்மாளம் அடிப்பார் என நான் கூறவில்லை; சாமி சிதம்பரனார் கூறினார்.

இவ்வாறு நான் பேசியதற்கு, என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதை நீதிமன்றத்தில் சந்தித்து நிரபராதி எனத் தீர்ப்பு பெற்றுள்ளேன். அதற்கான ஆதாரத்தை நீதிமன்றத்தில் வழங்கி குற்றமற்றவன் எனத் தீர்ப்பு பெற்றுள்ளேன்.

அண்ணாதுரையும், கருணாநிதியும் கீழ்த்தரமானவர்கள்

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை, கருணாநிதி ஆகியோர் பணத்தை தட்டிப் பறித்துக் கொள்வார்கள் என்று கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார். அண்ணாதுரையும், கருணாநிதியும் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை கண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.

ஹெச். ராஜா

தமிழ்நாடு முதலமைச்சருக்கும் மோடிதான் பிரதமர். எந்தச் சின்ன மனுஷனுக்கும், பெரிய மனுஷன் மோடிதான் பிரதமர். தனிப்பட்ட முறையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர், நான் அவரைக் குறிப்பிடவில்லை.

பிரதமர் மோடியைப் படுகொலை செய்ய திட்டம்

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் வருகையின்போது விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் பின்னணியில் சோனியா காந்தி இருக்கிறார். அவரது வீட்டில் மோடியை படுகொலை செய்வதற்குத் திட்டம் போட்டுவருவதாகக் கூறப்படுகிறது. ஜோதிமணி, திருமாவளவன் போன்றவர்கள் மனித பிறவியே அல்லாத மிருக எண்ணம் கொண்டவர்கள்.

கரூரில் உள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை குண்டர் சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும். ஒல்லியாக இருப்பதினால் அவரை குண்டர் சட்டத்தில் கைதுசெய்யலாம், ஏனென்றால் ஒல்லியாக இருந்த யூ-ட்யூபர் கிஷோர் கே. சாமியைகூட குண்டர் சட்டத்தில்தான் தமிழ்நாடு காவல் துறை கைதுசெய்தது. எனவே ஜோதிமணியை கரூர் காவல் துறை கைதுசெய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: Video: பெண் சிலையை முத்தமிட்டுக் கொஞ்சும் முதியவர்!

ABOUT THE AUTHOR

...view details