கரூர் மாவட்டம் பரமத்தியை அடுத்த காருடையாம்பாளையத்தில் தனியார் பேப்பர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் 15க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு தோகைமலைக்கு வேன் புறப்பட்டது. கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியிலிருந்து கோவை நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் மீது வேன் மோதியது. பேருந்து மீது வேன் மோதியதில் சுமார் 100 அடி தூரம் சென்று சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது.
அரசுப் பேருந்து - தனியார் வேன் மோதி விபத்து: ஒருவர் உயிரிழப்பு!
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்தும், தனியார் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
accident
இந்த விபத்தில் தனியார் நிறுவன ஊழியர்களை ஏற்றிக் கொண்டு சென்ற வாகனம் பெரிய அளவில் சேதமடைந்தது. இதில் வேனில் பயணம் செய்த வீரப்பூர் பகுதியைச் சேர்ந்த சினேகா(19) என்பவர் உயிரிழந்தார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்து விபத்து குறித்து பரமத்தி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயம்பேட்டில் அரசுப் பேருந்து மோதி வியாபாரி பலி!