தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலைக்கு ஆதரவாக அரவக்குறிச்சியில் ஜி.கே.வாசன் பிரச்சாரம் - தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி

அரவக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளரும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவருமான அண்ணாமலையை ஆதரித்து நடிகை கௌதமி, ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

தேர்தல் பரப்புரையில் ஜி.கே.வாசன்
தேர்தல் பரப்புரையில் ஜி.கே.வாசன்

By

Published : Mar 28, 2021, 11:59 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் எட்டு நாள்களே உள்ள நிலையில், அதற்கான தேர்தல் பரப்புரையில் வேட்பாளர்களும் அரசியல் தலைவர்களும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவரும், விருப்ப ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அலுவலருமான அண்ணாமலை நேற்று ( மார்ச்.27) காலை, பரமத்தி ஒன்றியம் நெடுங்கூர், காருடையாம்பாளையம் பகுதிகளில் தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.

அதனைத் தொடர்ந்து, மாலை 5 மணி அளவில் அரவக்குறிச்சி பகுதிகளில் திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அவருக்காக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய வாசன், ”காவல் துறையில் மிக உயர்ந்த பதவியை விட்டுவிட்டு அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை ஐபிஎஸ் போட்டியிடுகிறார். அவரை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும். மத்தியில் ஆளும் பாஜக அரசு இந்திய நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கிறது. அவர்கள் நிச்சயம் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்றுவார்கள்.

தேர்தல் பரப்புரையில் ஜி.கே.வாசன்
இந்தியாவே வியந்து பார்க்கும் அளவிற்கு தமிழ்நாட்டில் ஆட்சி நடைபெற்று வருகிறது. சிறந்த ஆளுமையின் கையில் தமிழ்நாட்டின் ஆட்சி உள்ளதால் அது தொடர வேண்டும். எனவே நீங்கள் பாஜக அரவக்குறிச்சியில் வெற்றி பெற தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பீர்” என்று பேசினார்.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து ஏற்கனவே நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், கௌதமி, தற்போதுதமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர்ஜி.கே.வாசன் எனப் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால் அத்தொகுதி களைக்கட்டி வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details