கரூர் மாவட்டம், வையாபுரி நகர், 3ஆவது கிராஸ் பகுதியைச் சார்ந்த முருகன் என்பவர் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவரது மகள் விஷாலி(14), பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி. அவரது தாத்தா வீட்டு ஆதர்ஷ் ரெசிடென்ஸிக்குச் சென்றுள்ளார். ஜூலை 4ல் நண்பகல் வீட்டிலிருந்து நான்காவது மாடியில் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.
செல்ஃபி எடுக்கும்போது மாடியில் இருந்து விழுந்த மாணவி! - 4th floor
கரூர்: 10ஆம் வகுப்பு பள்ளி மாணவி செல்ஃபி எடுக்கும் போது 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் நேற்று (ஜூலை 5) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
![செல்ஃபி எடுக்கும்போது மாடியில் இருந்து விழுந்த மாணவி! Selfie death](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-07:46:19:1593958579-tn-krr-01-school-student-death-pic-scr-7205677-05072020193753-0507f-1593958073-23.jpg)
Selfie death
இந்நிலையில் உடனே அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன் தினம் (ஜூலை 4) சிகிச்சைக்கு அனுமதி இருந்த நிலையில், நேற்று (ஜூலை 5) சிகிச்சைப் பலனின்றி இறந்துவிட்டார். இதுகுறித்து கரூர் நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.