மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசிக்கக்கூடிய கருப்பையா, சித்ரா தம்பதி, காந்திய தேசிய ஒருங்கிணைப்பாளராக பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் இருவரும் சமூகப்பணியில் தீராத ஆர்வம் காட்டி வருகின்றனர். இத்தம்பதி, இதுவரை 85 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளனர்.
அதேபோல், காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நாகப்பட்டினத்தில் உள்ள சுதந்திரப் போராட்ட வீராங்கனை, தில்லையாடி அம்மையார் நினைவிடத்திலிருந்து திருப்பூர் பகுதியில் இருக்கக்கூடிய, திருப்பூர் குமரன் நினைவிடம் வரை நடை பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
நாட்டைக் காக்க ரஃபேல், ரஃபேலை காக்க எலுமிச்சை - நெட்டிசன்களிடம் சிக்கிய ராஜ்நாத் சிங்!
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூவர்ணக் கொடியைக் கையில் ஏந்தி, துண்டுப்பிரசுரங்களை மக்களுக்குக் கொடுத்து, காந்தியின் தேசபக்தி, அகிம்சை, சமூகநல பணி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைப்பயணமாகச் சென்று வருகின்றனர்.
பல மைல்கள் நடந்து, காந்தி கொள்கையை பரப்பும் தம்பதி மேலும், இது 11 நாட்கள் பயணமாக இருக்கும் என்று கூறுகின்றனர்.கரூரில் சமூகநல ஆர்வலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளின் உறவினர்கள் அவர்களை வரவேற்று, நல்ல முறையில் உபசரித்து வழி அனுப்பினர். இந்த பாதையாத்திரையானது, அக்டோபர் 13ஆம் தேதி திருப்பூரில் நிறைவடைய உள்ளது என்றும், அப்போது தமிழ்ச் சங்கம் சார்பில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளதாக கருப்பையா செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.