தூய்மைப் பணியாளர்களுக்கு பாத பூஜை
கரூர்: கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள் 105 பேர்களுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஐந்து லட்சம் ரூபாய்க்கான இலவச காப்பீடு வழங்கி அவர்களுக்கு பாத பூஜை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மை பணியாளர்களுக்கு பாத பூஜை
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் செம்படாபாளையத்தில் தொழிலதிபர் தோகைமுருகன் என்பவர் குடும்பத்துடன் தூய்மைப் பணியாளர்கள் பணியை பாராட்டி அவர்களுக்கு பாத பூஜை செய்து, மலர் தூவி, தீபாராதனை எடுத்து வணங்கி மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.