கரோனா வைரஸ் தொற்று பரவுவதலைத் தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, கரூரில் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரைக் கண்காணித்து சிகிச்சையளிக்க வசதியாக 300 படுக்கைகள் ஏற்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
அதனடிப்படையில், கரூர் புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கான வசதிகள் தயார் நிலையில் உள்ளனவா? என்பதை கரூர் ஆட்சியர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி கண்காணிக்க மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 7ஆவது மாடியில் தனி பிளாக் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் அன்பழகன், "இதுவரை பழைய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவரும், புதிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருவர் என மொத்தம் நான்கு பேர், கரோனா வைரஸ் தொற்று தடுப்புப் பிரிவில் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.