கரூர் மாவட்டத்தில் இளம்பெண் பெண், மூன்று சிறுவர்கள் ஆகிய நால்வருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களுக்கு கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
கரோனா பாதிப்புக்குள்ளான நான்கு பேரும் சென்னையிலிருந்து கரூர் மாவட்டத்துக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுவரை கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் இதுவரை 116 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து 37 பேர் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், தற்போது மேலும் நான்கு பேருக்கு நோய்த்தொற்று இருப்பதால் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:கரூரில் கரோனாவால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பால் மக்கள் அச்சம்!