தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போடாத சாலைக்கு பணம் எடுப்பதுதான் திராவிட மாடல் ஆட்சி -  எம்.ஆர்.விஜயபாஸ்கர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர் சந்திப்பு

போடாத சாலைக்கு பணம் எடுப்பதுதான் திராவிட மாடல், திமுக ஆட்சி என அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

போடாத சாலைக்கு பணம் எடுப்பதுதான் திராவிட மாடல் திமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
போடாத சாலைக்கு பணம் எடுப்பதுதான் திராவிட மாடல் திமுக ஆட்சி - முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

By

Published : Apr 9, 2022, 11:09 AM IST

சென்னை: கரூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத் துறையில் நடக்கும் ஊழல்கள் குறித்து அதிமுக முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளரிடம் நேற்று (ஏப். 8) மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "கரூரில் நெடுஞ்சாலைத் துறையில் நடைபெறும் ஊழல் குறித்துத் தொடர்ந்து புகார் அளித்து வருகிறோம். ஆனால், புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காமல் சாலைகளை மட்டும் போட்டு வருகின்றனர்.

ரூ. 150 கோடி செலவில் சாலை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், தற்போதுவரை சாலை போடாமல் உள்ளது. வேலையை நிறுத்திவிட்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், கரூர் மாவட்ட ஆட்சியர் எங்களைச் சந்திக்க மறுக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் சந்திக்க மறுப்பது இந்த விவகாரத்தில் அவருக்கும் தொடர்பு இருக்குமோ? என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. அங்கு முழுமையாக ஊழல் நடந்து வருகிறது. போடாத சாலைக்குப் பணம் எடுப்பதுதான் திராவிட மாடல் திமுக ஆட்சி. இன்று (அதாவது நேற்று) தலைமைச் செயலாளரிடம் மனு அளித்துள்ளோம். இதுதொடர்பாக சட்டப்பேரவையில் பேச எதிர்க்கட்சி தலைவரிடம் வலியுறுத்தியுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையே மெட்ரோ ரயில் திட்டத்துக்கு அனுமதி'

ABOUT THE AUTHOR

...view details