கரூர் மாவட்டத்தில் தாந்தோணி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் 4,100 நபர்களுக்கு உணவுக்கான பொருள்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஆகியோர் கலந்துகொண்டனர். இதனால் கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மணவாடி ஊராட்சி அய்யம்பாளையம் காலனி, வெள்ளியணை ஊராட்சி தாளியாபட்டி மற்றும் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காருடையாம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள ஏழை-எளிய அடித்தட்டு மக்களான சுமார் 1. 20 லட்சம் குடும்பங்கள் பயனடைந்துள்ளன.