தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பறக்கும் படை நடவடிக்கை : குளித்தலை அருகே 56 லட்சம் ரூபாய் பறிமுதல்! - கரூர் பறக்கும் படை நடவடிக்கை

கரூர்: குளித்தலை அருகே ஏடிஎம் பணம் நிரம்பும் வாகனத்தில் ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 56 லட்சம் ரூபாய் பணத்தை பறக்கும் படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறக்கும் படை நடவடிக்கை
பறக்கும் படை நடவடிக்கை

By

Published : Mar 31, 2021, 5:10 PM IST

குளித்தலை சட்டபேரவை தொகுதிக்குள்பட்ட இரும்பூதிபட்டி பேருந்து நிறுத்தத்தின் அருகே பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக வந்திருந்த வாகனத்தை ஆய்வு செய்ததில், உரிய ஆவணங்கள் ஏதும் இன்றி 56 லட்சம் ரூபாய் வாகனத்தில் இருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குளித்தலை தேர்தல் நடத்தும் அலுவலர், வருமானவரித் துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனனடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரில் ஆய்வு செய்து 56 லட்சம் ரூபாய் ரொக்கத்தை குளித்தலை சார் கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: திராவிட ஆட்சியே பிரச்னைதான் - நாதக வேட்பாளர் சத்யா!

ABOUT THE AUTHOR

...view details