அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் அசோகன் தலைமையிலான கண்காணிப்புக் குழுவினர் புகழூர் வட்டம், கரூர் கோவை சாலையில் வைரமடை சோதனைச்சாவடியில் வாகன சோதனை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது ஏடிஎம் மையத்திற்குப் பணம் நிரப்பும் வாகனத்தில் கரூர் வடக்கு காந்தி கிராமம் கன்னியப்பன் மகன் கோபால், கரூர் புலியூர் அமராவதி நகர் பொன்னுசாமி மகன் முனியப்பன், கரூர் வெண்ணைமலை அம்மன் நகர் சம்பத் மகன் கோபாலகிருஷ்ணண், மண்மங்கலம் காதப்பாறை தங்கராஜ் நகர் சங்கர் மகன் விக்ரம் ஆகியோர் உரிய ஆவணங்களின்றி 37 லட்சம் ரூபாய் கொண்டுசென்றது சோதனையில் கண்டறியப்பட்டது.
அதையடுத்து, வருமானவரித் துறை அலுவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்துத் துறை அலுவலர்களும் நேரில் வந்து ஆய்வுசெய்தனர். பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி தொகை பறிமுதல்செய்யப்பட்டது.
அரவக்குறிச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பு சமர்ப்பிக்கப்பட்டு அதன்பின்னர் அரவக்குறிச்சி சார்நிலைக் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நேற்று, இதேபோல குளித்தலையில் ஏடிஎம் பணம் நிரப்பும் வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்டதாக 56 லட்சம் ரூபாய் பறிமுதல்செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திமுக - பாஜக மோதல்; தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்!