கரூர் ராமானுஜம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாப்பம்மாள் (82). இவரிடம் இன்று காலை இருசக்கர வாகனத்தில் வந்த இரு நபர்கள் முகவரி கேட்பது போல் நடித்து மூதாட்டி அணிந்திருந்த ஆறு பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் சென்றனர். இதனையடுத்து மூதாட்டி கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதேபோல், அடுத்த அரை மணி நேரத்தில் ஈரோடு கரூர் சாலையில், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எடமலைப்பட்டி புதூர் சித்ரா (54) என்பவரைப் பின்தொடர்ந்து சென்ற நபர்கள், மூன்று பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.