தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவிரிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! - flood warning for cauvery belt people karur collector said

கரூர்: மேட்டூர் அணையிலிருந்து 40 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

flood-warning-for-cauvery-belt-people-karur-collector-said

By

Published : Sep 26, 2019, 7:22 AM IST

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துவருவதால் மேட்டூர் அணையிலிருந்து இன்று காலை நிலவரப்படி 40ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை குறித்து பொதுமக்களுக்கு தண்டோரா, ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கரையோரங்களில் இளைஞர்கள், சிறுவர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் என யாரும் ஆற்றில் இறங்கி குளிப்பதையோ புகைப்படம் எடுப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டுவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட ஆட்சியர்

மேலும், கரையோரம் உள்ள மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் உடமைகள், கால்நடைகளுடன் மேடான பகுதிக்கு செல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் த. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:வெள்ளம், பேரிடரை எதிர்கொள்ள பிரிட்டனுடன் பயிற்சி முகாம் - அமைச்சர் உதயகுமார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details