தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரூரில் கரோனாவிலிருந்து மீண்ட 95 வயது மூதாட்டி உள்பட ஐவர் வீடு திரும்பினர் - corona positive people recovered in Karur medical college hospital

கரூர்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 95 வயது மூதாட்டி உள்பட ஐந்து பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த ஐந்து பேர்!
கரூரில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்த ஐந்து பேர்!

By

Published : Apr 30, 2020, 1:35 PM IST

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இதில் சிகிச்சைப் பெற்று குணமடைந்த மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கடந்த 13ஆம் தேதிமுதல் தொடர்ந்து குணமடைந்து வீடு திரும்பிவருகின்றனர்.

அந்தவகையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்பட ஐந்து பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இவர்களை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரோஸிவெண்ணிலா, மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கைதட்டி வழியனுப்பிவைத்தனர்.

இதனையடுத்து கரூரிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 164ஆக அதிகரித்துள்ளது. கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ள நிலையில் கடந்த 17ஆம் தேதிக்குப் பிறகு கடந்த 12 நாளில் கரூர் மாவட்டத்தில் யாருக்கும் கரோனா தொற்று ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...கோயம்பேடு சந்தையில் வேலை பார்த்தவருக்கு கரோனா!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details