தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஏலச்சீட்டு மோசடி: கொலை மிரட்டல்விடுத்தவர் மீது நடவடிக்கை கோரி மனு - கரூர் மாவட்டச்செய்திகள்

கரூர்: 50 லட்சம் ரூபாய் ஏலச்சீட்டு மோசடியில் சாதிப் பெயர் கூறி கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்
ஏலச்சீட்டு மோசடியால் பாதிக்கப்பட்டவர்கள்

By

Published : Apr 27, 2021, 6:43 PM IST

கரூர் மாவட்டம், தோகைமலை அடுத்துள்ள கீழவெளியூர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிள்ளையார் கோயில்பட்டி பகுதியில் ஏலச்சீட்டு நடத்திவருபவர் சுப்ரமணி மகன் சரவணன்.

இவர் முதிர்வுத் தொகையைக் கொடுக்காமல் காலதாமதப்படுத்திவந்ததால், இது குறித்து கேட்கச் சென்ற நபர்களை அவர்களின் சாதிப் பெயரைச் சொல்லி தாக்கியும், வாகனம் ஏற்றிக் கொன்றுவிடுவதாக கொலை மிரட்டல் விடுத்தும் உள்ளார்.

இது குறித்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாதிக்கபட்டவர்கள், "ஏலச்சீட்டில் 40 நபர்கள் செலுத்திய 50 லட்சம் ரூபாயை மாவட்ட ஆட்சியர்திரும்பப் பெற்றுத்தர வேண்டும்.

கடந்த சில நாள்களாக காவல் நிலையத்தில் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கண்ணீர் மல்க கூறினர்.

ABOUT THE AUTHOR

...view details