கரூர் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசூர் குரூப் நிறுவன உரிமையாளர் கோபிநாத் என்பவர் ஏழு நபர்களுடன் இணைந்து 2011ஆம் ஆண்டு முதல் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் பங்கு தொகையை முறையாக ஏழு பங்குதாரர்களுக்குப் பிரித்துக் கொடுக்காமல் 1.5 கோடி ரூபாய் அளவிற்கு மோசடி செய்துள்ளார். இதனை எதிர்த்து இதர பங்குதாரர்களும் கொடுத்த புகாரின் பேரில் 2017ஆம் ஆண்டு கோபிநாத் மீது பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பங்குத் தொகை தராத நிறுவன உரிமையாளருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை - share market
கரூர்: தனியார் நிதி நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குப் பங்குத் தொகையைக் கொடுக்காமல் மோசடி செய்ததாக நிதி நிறுவனத்தின் உரிமையாளருக்கு தமிழ்நாடு முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றம் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
உத்தரவு
இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீரா சுமதி, கோபிநாத்தின் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஏழாண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் 8 ஆயிரம் ரூபாய் அபதாரமும் விதித்து உத்தரவு பிறப்பித்தார்.