தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிக வட்டி தருவதாக கூறி ரூ.65 லட்சம் மோசடி: தந்தை, மகன் கைது! - தந்தை, மகன் கைது

கரூர்: அதிக வட்டி தருவதாகக் கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்த தந்தை, மகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 65 லட்சம் மோசடி :தந்தை, மகன் கைது...!
அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 65 லட்சம் மோசடி :தந்தை, மகன் கைது...!

By

Published : Aug 27, 2020, 3:54 PM IST

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைசாமி மகன் சேதுராமன், திருச்சி மாவட்டம் தாராநல்லூரைச் சேர்ந்த லட்சுமணன் பிள்ளை மகன் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் லாலா பேட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்திவருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த பொன்னையா என்பவரிடம் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இதனைப் போன்று 11 நபர்களிடம் ஆசை வார்த்தை கூறி ரூபாய் 65 லட்சம் மதிப்பில் நிதியை பெற்றுக்கொண்டு, முதலீடு செய்தவர்களுக்கு நிதி தர மறுத்துள்ளனர்.

இதனடிப்படையில் பொன்னையா என்பவர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.

அதன் பேரில் நிதி நிறுவன மேலாளர்கள் துரைசாமி, அவரது மகன் சேதுராமன் இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க...தமிழ்நாட்டிலிருந்து லாரியில் கொண்டுசெல்லப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள ஸ்மார்ட்போன்கள் கொள்ளை

ABOUT THE AUTHOR

...view details