தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற விவசாயிகள்!

கரூர்: அரவக்குறிச்சியில் நிர்வாணமாக மனு தாக்கல் செய்ய முயன்ற விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்றனர்.

farmers
farmers

By

Published : Mar 18, 2021, 10:01 PM IST

தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 16 விவசாயிகள், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று, அரை நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர். காவல்துறையினர் அவர்களிடம் ஆடை உடுத்திச் சென்று தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். அதனை ஏற்க மறுத்த விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் விவசாய சங்க வேட்பாளர் பல்லப்பட்டி ராஜேந்திரன், திடீரென தனது ஆடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார். இதையடுத்து விவசாயிகளை வலுக்கட்டாயமாக கைது செய்து வாகனத்தில் ஏற்றி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, “ டெல்லியில் அமித்ஷாவும், தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணியும் எங்களை அழைத்துப் பேசி, அனைத்து சிறு குறு விவசாயிகளுக்கும் மாதம் ரூ.6,000 பென்ஷன் வழங்குகிறோம் என வாக்குறுதி அளித்தனர். கோதாவரியில் செல்லும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரிக்கு திருப்பி விடுமாறு கேட்டோம். அடுத்த நாளே அதை நிறைவேற்றுவதாக கூறினர்.

நிர்வாணமாக வேட்புமனு தாக்கல் செய்ய முயன்ற விவசாயிகள்!

விவசாயிகளுக்கு தனிநபர் கடன் 3 முதல் 5 லட்சம் வரை வழங்கப்படும். பிறகு 5 ஆண்டுகளுக்கு பிறகு கடனை திருப்பிச் செலுத்தினால் போதும் என மோடி தெரிவித்திருந்தார். அதனை நம்பி போராட்டத்தை விலக்கிக் கொண்டோம். ஆனால், இவை எதையும் மத்திய அரசு செய்யவில்லை. விவசாயிகள் என்றால் இந்த நாட்டில் அடிமைகளா?

எனவே, பாஜக போட்டியிடும் தொகுதிகளில் விவசாய சங்க பிரதிநிதிகளை நிறுத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம் என்றதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறோம் என்றனர். ஆனால் இதுவரை யாரும் அழைத்துப் பேசவில்லை. எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

இதையும் படிங்க: வேளச்சேரி மநீம வேட்பாளர் சந்தோஷ் பாபுவுக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details