தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரஜினி அரசியலுக்கு வர விருப்பம் தெரிவித்து ரசிகர்கள் அறப்போராட்டம்

கரூர்: ரஜினி தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி கரூரில் அவரது ரசிகர்கள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

rajini fans protest
rajini fans protest

By

Published : Jan 2, 2021, 8:10 PM IST

நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் கட்சித் தொடங்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அப்போது வழக்கமான பரிசோதனையில் படப்பிடிப்புத் தளத்தில் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. ரஜினிகாந்திற்கு நெகடிவ் என்று உறுதியானாலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

அப்போது, திடீரென ரத்த அழுத்த மாறுதல் ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றார். நான்கு நாள்கள் சிகிச்சைப் பெற்றுவந்த ரஜினி உடல்நிலை மாறுதலால் ஓய்வெடுக்க விரும்பினார். மருத்துவர்களும் அவருக்கு அறிவுரைகள் வழங்கினர்.

இதனையடுத்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய ரஜினிகாந்த், உடல்நிலை பாதிப்பு காரணமாக தான் அரசியலுக்கு வரவில்லை என அறிக்கை வெளியிட்டார். கட்சி தொடங்குவார் என எதிர்பார்த்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர். ஆண்டவன் தனக்கு உடல்நிலை குறித்து எச்சரிக்கைவிடுத்துள்ளதால் அரசியலுக்கு வரவில்லை எனத் தன்நிலை விளக்கம் அளித்தார்.

இந்த முடிவை ஏற்க மறுக்கும் அவரது ரசிகர்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்துவந்தனர். இந்நிலையில், கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா அருகே உள்ள தபால் தந்தி அலுவலகம் முன்பு ரஜினி ரசிகர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ரஜினியை தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி ஆன்மிக வழியில் அறவழிப் போராட்டம் நடத்தினர்.

ரஜினி ரசிகர்கள் கூறுகையில், "எங்கள் தலைவர் ரஜினிகாந்த். ஆனால், ஆண்டவன் அவருக்கு நீண்ட ஆயுளை கொடுத்துள்ளதால் அவர் மீண்டும் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும். அதை வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:'அன்னை தெரசா உயிருடன் இருந்திருந்தால் முதலமைச்சரை வாழ்த்தியிருப்பார்' - அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

ABOUT THE AUTHOR

...view details